ETV Bharat / state

ஊரடங்கு: விழுப்புரத்தில் பத்தாயிரத்தைத் தாண்டிய வழக்குகள்! - கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறியதாக மாவட்டத்தில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

more than ten thousand cases filed for violate curfew rules in vilupuram

author img

By

Published : May 16, 2020, 3:27 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்திய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்த உத்தரவு அமலில் உள்ளபோது விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக நேற்று மட்டும் 225 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 242 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல்செய்யப்பட்டன.

மேலும், ஊரடங்கு உத்தரவினை மீறியதாக கடந்த மார்ச் 25ஆம் தேதிமுதல் நேற்றுவரை (மே 15) மாவட்டத்தில் மொத்தம் பத்தாயிரத்து 187 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில் பத்தாயிரத்து 385 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஏழாயிரத்து 348 இருசக்கர வாகனங்கள், 128 மூன்று சக்கர வாகனங்கள், 159 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அலட்சியம்! ஆறு கோடியை எட்டும் அபராத தொகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.