விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் சமயத்தில் மட்டும் வருகிறவன் அல்ல ஸ்டாலின். மக்கள் பிரச்சினைகள் அனைத்திலும் பங்கெடுத்துக் கொள்பவன். நான் சொல்வதை காப்பி அடிப்பதுதான் பழனிசாமியின் வேலை. அதனால்தான் அவரை உதவாக்கரை என்கிறேன்.
கரோனா காலத்தில் தேர்வுகளை ரத்து செய்ய சொன்னது நான்தான். மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க கவர்னரை சந்தித்து, மனு அளித்தது திமுகதான். வளவனூர் பகுதியில் 25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டுமானத்தில் உடைப்பு ஏற்பட்டது தான் பழனிசாமி ஆட்சியின் சாதனை.
சி.வி.சண்முகம் பத்திரப்பதிவு துறையில் ஊழல் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். விழுப்புரம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறவேண்டும். தமிழ்நாடு பெரியார் மண், இங்கு மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது” என்றார்.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் இன்று பரப்புரை!