ETV Bharat / state

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கற்பித்தலில் புதுமை - பிரதமர் மோடி பாராட்டிய ஆசிரியர் திலீப் சிறப்பு பேட்டி!

வெளிநாடுகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போன்று 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி முறையை எங்கள் பள்ளியிலும் அறிமுகம் செய்தோம். மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் கொடுக்கிறோம். ஆனால் அந்த லேப்டாப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் நாம் மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்கிறார் பிரதமரின் பாராட்டை பெற்ற ஆசிரியர் திலீப்.

teacher dhilip
teacher dhilip
author img

By

Published : Dec 28, 2020, 6:08 PM IST

விழுப்புரம்: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (டிச.27) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்து ஆங்கில ஆசிரியர் திலீப் குறித்து பாராட்டிப் பேசியிருந்தார். தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வரும் வகையில், கற்பித்தலில் புதுமை புகுத்திய இவரின் முயற்சிக்காக பிரதமர் இவரை பாராட்டி இருந்தார்.

ஆங்கில ஆசிரியரான எஸ்.திலீப் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள சத்யமங்கலம் கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றவர். குழந்தைகள் ஆங்கிலத்தை எளிதில் கற்கும் வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பாடங்களை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை மாணவர்கள் விளையாட்டு மூலம் எளிதில் கற்கலாம். கிராமப்புற மாணவர்களுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக உழைத்து வருகிறார்.

ஆசிரியர் திலீப்
ஆசிரியர் திலீப்

பிரதமர் பாராட்டால் மகிழ்ச்சியின் தருணத்தில் இருக்கும் அவரிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் பேட்டி எடுப்பதற்காக பேசினோம். புன்சிரிப்புடன் நம்மிடம் பேச்சை தொடங்கினார். "நான் ஆசிரியர் பணிக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் என்னை பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளியின் கட்டமைப்புக்காக நாம் அரசையே நம்பி இருக்க வேண்டியதில்லை. நம்மால் முடிந்த விஷயத்தை நாம் கொண்டு வரலாம். மாணவர்களுக்காக ஐந்து லேப்டாப் என்னுடைய முயற்சியால் கொண்டு வந்தேன். அதன் பிறகு ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்தேன். அதற்கு பலரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

ஆசிரியர் திலீப் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி!

மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் புரியவேண்டும் என்பதற்காக படங்களுடன் கூடிய அகராதியை சில ஸ்ஃபான்சர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறேன் என்றவரிடம், பாடம் நடத்துவதில் தகவல் தொழில்நுட்பத்தை எப்படி புதுமையாக கையாண்டீர்கள் என கேட்டோம்.

“வெளிநாடுகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போன்ற 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி முறையை எங்கள் பள்ளியிலும் அறிமுகம் செய்தோம். மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் கொடுக்கிறோம். ஆனால் அந்த லேப்டாப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் நாம் மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். ஊரடங்கு காலத்திலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக என்னுடைய பெயரில் யூ-டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவர்களுக்கு பாடம் நடத்தினேன்.

கணினி வழி கற்பித்தல்
கணினி வழி கற்பித்தல்

மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கிய விருது, இளம் வயதிலேயே ஆசிரியருக்கான தேசிய விருது என பல்வேறு விருதுகள் என்னுடைய முயற்சியை பாராட்டி வழங்கப்பட்டுள்ளன. என்னுடைய இந்த முயற்சிகளுக்கு என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். மற்ற ஆசிரியர்யர்களும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி பாடம் நடத்த வேண்டும் என்று பல்வேறு கருத்தரங்குகளில் கருத்தாளராக கலந்துகொண்டு நான் எடுத்த முயற்சிகள் குறித்து அவர்களிடம் பகிர்ந்திருக்கிறேன்” என்றார்.

குடும்பத்தினருடன் ஆசிரியர் திலீப்
குடும்பத்தினருடன் ஆசிரியர் திலீப்

'ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்ற சொல்லுக்கு ஏற்ப தன்னுடைய ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து மற்ற ஆசிரியர்களுக்கும் முன்னோடியாக இருக்கும் இதுபோன்ற ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே...

இதையும் படிங்க:கற்பித்தலில் புதுமை: பிரதமர் மோடி பாராட்டிய தமிழாசிரியர் ஹேமலதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.