உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட அவைத்தலைவருமான ராதாமணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து புதுச்சேரி கல்வி மைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து ராதாமணியின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சி குப்பத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று மாலை 3 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.