விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ , கடந்த ஞாயிற்றுக்கிழமை எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சென்று உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்.
![செய்தியாளர்களிடம் பேசும் எல் முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7187666_murugan-1.jpg)
அப்போது முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற அடிப்படையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சபட்சமாகத் தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்" எனக்கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்