விழுப்புரம்: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 9) முதல்கட்டமாக 21 இடங்களில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொன்முடி பரப்புரையை மேற்கொண்டார். அப்போது குடும்பத் தலைவிகள் மத்தியில் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி அவர் வாக்குச் சேகரித்தார்.
அவர் பேசுகையில், "உங்கள் பகுதியின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பெண்களைப்போல வாக்குச் சேகரிப்பில் ஈடுபட முடியாது. குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்டாயம் திமுகவிற்கு வாக்களிக்க பரப்புரை செய்ய வேண்டும்.
யோவ், ஒழுங்கா சூரியனுக்கு ஓட்டுப் போடு. இல்லனா அடுத்த வேளை சாப்பாடு கிடையாது என குடும்பத் தலைவரை மிரட்டுங்கள். உங்களுக்குத் தெரியாத மிரட்டலா? நானும் என் வீட்டுக்காரம்மாவுக்கு பயந்துதான் இருக்கிறேன்" எனக் கலகலப்பாகப் பேசி வாக்குகளைச் சேகரித்தார்
இதையும் படிங்க: "வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்" - பிரதமர் மோடி