விழுப்புரம்: விழுப்புரம் நகரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோரது தலைமையில் இன்று (மே 28) திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி, நிலவள வங்கிகளில் கழக தோழர்கள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என 5 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “மும்மொழிக்கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் என நேரிடையாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என நான் கேட்டிருந்ததற்கு அவர் தயார் என கூறியுள்ளார். அப்படி விவாதிக்க தயார் என்றால் சென்னையில் எந்த இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு விவாதிக்கலாம் நானும் தயாராக உள்ளேன்” என பொன்முடி தெரிவித்தார்.
அரசுக்கு தெரியாமல் ஆளுநர் வெளியிட்ட அறிக்கை?: தொடர்ந்து பேசிய அமைச்சர், “ஊட்டியில் துணை வேந்தர்களுக்கு எல்லாம் கூட்டம் 5 ஆம் தேதி புதிய கல்வி கொள்ளை தொடர்பாக நடைபெற உள்ளதாக வேந்தர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த புதிய கல்வி கொள்கை தொடர்பாக தற்போது கூட்டம் நடத்தபட வேண்டிய அவசியமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசுக்கே தெரியாமல் துணை வேந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும், அரசியலில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும், “அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்குவதாக வெளியான அறிவிப்பு திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமனுக்கு தெரியாமலையே இது நடந்திருக்கக்கூடும் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியானபோது, அவர் சிண்டிகேட் மெம்பராகவே இல்லை அவருக்கு எப்படி தெரியும்” என அமைச்சர் பொன்முடி கேள்வியெழுப்பியுள்ளார்.
இரு மொழிக்கொள்கைக்கே ஆதரவு: தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் மொழி வளர்ச்சி மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் ஏன் ஆளுநரை சந்தித்து இணை வேந்தர்களுக்கு அறிவிப்பு வழங்கவில்லை என கேட்க வேண்டும். பாஜக அறிக்கை விட்டதால்தான், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என அறிவிப்பு வெளிவந்ததாக கூறுவது ஏற்க முடியாது என்று கூறிய அமைச்சர், தெளிவாக தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும் என்றார். எந்த மொழியையும் படிக்க நாங்கள் எதிர்ப்பதாக இல்லை எனவும் ஆனால், இரு மொழிக்கொள்கை தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தேர்வு எழுதுகிறபோது மாணவர்களின் சங்கடங்களை புரிந்துகொள்ள வேண்டும். மும்மொழிக்கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி மொழியில் படிப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கபடுமென குறிப்பிடுகிறார்கள். ஆனால், தமிழுக்கு அதில் சலுகைகள் வழங்கப்படவில்லை. கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக ஆகலாம் என கூறியது 'திராவிடமாடல்' ஆட்சி தான், ஆனால் இங்கு இந்தியை புகுத்த முற்படுகிறார்கள். தமிழ் மொழிக்கு எதிர்ப்பதாக அண்ணாமலை பேசுகிறார்.
அண்ணாமலைக்கு தமிழின் மீது அக்கறையில்லை: சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஆங்கிலம் கட்டாயம், தமிழ் மொழி விருப்பப்பாடம் என வைத்துள்ளார்கள், அதில் தமிழ் மொழி கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வரவில்லை அதனை அவர்கள் செய்யவேண்டும். பாஜகவினருக்கு அண்ணாமலைக்கும் தமிழின் மீது அக்கறை இல்லை; எதுவானாலும் அரசியல் பண்ணலாம் என அண்ணாமலை நினைப்பதாக அவர் மேலும் குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து, திமுக இரண்டாவது பைல்ஸ் (DMK Files) வெளியிடுவதாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர் கேள்விக்கு, “அவர் எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும்” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: "ஆணைய அறிக்கையை வெளியிட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: ஆர்.ஜி.ஆனந்த் பகீர் தகவல்!