நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த கரோனா தடுப்புப் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் அளவுக்கு அரசு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் தனிப்பட்ட முறையில் ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்பட 14 வகையான மளிகை பொருட்கள், காய்கறிகளை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, நகராட்சி ஆணையர் அ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.