ETV Bharat / state

தனது மகன் குறித்து அவதூறு: அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் ஆணையரிடம் புகார்! - நீலாங்கரை

விழுப்புரம்: சமூக வலை தளங்களில் தனது மகன் குறித்து தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.வி சண்முகம் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

cv-shanmugam
author img

By

Published : Jun 27, 2019, 11:09 AM IST

Updated : Jun 27, 2019, 11:38 AM IST

சென்னையில் நள்ளிரவில் பழம் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவர் போதையில் சொகுசுக்காரை ஓட்டிவந்து ஆட்டோ ஒன்றின்மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அது மட்டும் இல்லாமல் சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

காவல்துறையினருடன் தகராறு

இந்த வீடியோவில் இருக்கும் நபர் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சிலர் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பதிவிட்டு சமூகவலை தளங்களில் பரப்பினர். இவ்வாறு தவறான தகவல்களை சமூக வலை தளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.வி சண்முகம் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவதூறு வீடியோ பரப்பிய நபரை தேடி வருகின்றனர்.

விழுப்புரம்: தனது மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் பழம் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவர்  போதையில் சொகுசுகாரை ஓட்டிவந்து ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தகவலறிந்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது போதையில் இருந்த நவீன் காவலர்களை தாக்கி தரக்குறைவாக திட்டினார். இதையடுத்து நவீன் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கிடையே வீடியோவில் இருக்கும் நபர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்ற தவறான செய்தியை சிலர் பரப்பினர். அதை உண்மை என நம்பி பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தனர்.

கைது செய்யப்பட்ட நவீனுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

அவரது புகார் மனுவில் சமூகவலைதளத்தில் அவரது மகனைப்பற்றி பரவும் வதந்தி செய்திகளை குறிப்பிட்டு, இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

Last Updated : Jun 27, 2019, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.