ETV Bharat / state

அமைச்சர் சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை! - minister C V Shanmugam

விழுப்புரம்: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

minister C V Shanmugam sister's son suicide
author img

By

Published : Oct 7, 2019, 10:04 AM IST

Updated : Oct 7, 2019, 10:48 AM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு வள்ளி என்ற தங்கை இருந்தார். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டார். இதையடுத்து, தன் தங்கையின் மகன் லோகேஷ் என்பவரை அமைச்சர் சண்முகம் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திண்டிவனத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் தங்கியிருந்த லோகேஷ், அவர் அறையில் நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சரின் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லோகேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அமைச்சரின் தங்கை மகன் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாம்புக்கு பயந்து பக்கத்து வீட்டில் தூங்கியவரின் வீட்டில் கொள்ளை!

Intro:விழுப்புரம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் இன்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.Body:தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவருக்கு வள்ளி என்ற தங்கை இருந்தார். இவர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பாதுகாப்பில் வள்ளியின் மகன் லோகேஷ் (26) இருந்து வந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் தங்கியிருந்த லோகேஷ், இன்று மாலை 5.30 மணி அளவில் மாடியில் இருந்த அறையில், மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சரின் உறவினர்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சரின் தங்கை மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:இந்த மரணம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ள முற்பட்டபோது, அமைச்சரின் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு செல்ல காவல்துறையினரும், கட்சி தொண்டர்களும் அனுமதி மறுத்துவிட்டனர்.

மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தெரிவிக்க காவல்துறை தரப்பு மறுத்து விட்டது.
Last Updated : Oct 7, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.