ETV Bharat / state

விடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விழுப்புரம்: சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக இன்று மதகுகளைத் திறந்துவைத்தார்.

minister c.ve.sanmugam opening veedur dam for cultivation

author img

By

Published : Jan 8, 2021, 12:24 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடுர் நீர்த்தேக்க அணை 1959ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வராகநதி பாக்கம் மலைத்தொடர், தொண்டியாறு, தொண்டூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீர் விடுர் அணையில் வந்து சேர்கின்றது. அணையில் சேரும் இந்த நீர் அணையிலிருந்து வராகநதியாக (சங்கராபரணி) புதுச்சேரி அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

வடகிழக்குப் பருவ மழை காலங்களில் அணை நிரம்பி அணையில் தேக்கப்படும் நீரானது விவசாய விளைநிலங்கள் பாசனத்திற்காக வருடாட்வருடம் நீர் திறந்து விடப்படுகிறது. 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயனடைகின்றது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் விடூர் அணை தொடர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அணையின் நீர் தேக்கத்தால் பாசன வசதி பெரும் விளைநிலங்களை உடைய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

பாசனத்திற்காக நீர் திறப்பு

இதனைத் தொடர்ந்து இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பாசனத்திற்காக மதகுகளை திறந்து வைத்தார். இதனால் அணையைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் பயனடையும் எனவும் 135 நாள்களுக்கு தேவைக்கேற்றபடி நீர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடூர் அணை திறப்பு 1,350 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.