ETV Bharat / state

நாடே பாராட்டுகிற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம் - அன்பில் மகேஷ் - விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்தல் பரப்புரை

இந்தியாவே பாராட்டுகிற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். பொறுப்பேற்றது முதல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

anbil
anbil
author img

By

Published : Sep 29, 2021, 3:51 PM IST

விழுப்புரம்: தமிழ்நாட்டில் விடுபட்டுப்போன ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதராவாக அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீதி வீதியாகச் சென்று திமுக, அதன் கூட்டணி கட்சியினருக்கு வாக்குச் சேகரித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

அப்போது பேசிய அவர், "இந்தியாவே பாராட்டுகிற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். பொறுப்பேற்றது முதல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

எதிர்காலத்தில் அரசு நிறைவேற்றுகின்றத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று சொன்னால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான் அதற்கு உதவியாக இருப்பார்கள்.

எனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக நிற்கின்ற திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.