ETV Bharat / state

முகக் கவசம் கூடுதல் விலைக்கு விற்கும் நிறுவனங்களுக்குச் சீல்...! - Mask High Rate In Viluppuram

விழுப்புரம்: கரோனா பரவலைத் தடுக்கும் முகக் கவசத்தைக் கூடுதல் விலைக்கு விற்பனைசெய்யும் நிறுவனங்களுக்குச் சீல்வைக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

முககவசம் கூடுதல் விலை விழுப்புரம் முககவசம் கூடுதல் விலை கரோனா வைரஸ் Mask High Rate Mask High Rate Corona Virus Viluppuram Mask High Rate In Viluppuram விழுப்புரம் முககவசம் கூடுதல் விலை
Mask High Rate
author img

By

Published : Mar 24, 2020, 12:02 AM IST

Updated : Mar 24, 2020, 1:54 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சானிடைசர், ஹேண்ட்வாஷ், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனைசெய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மூலம், மூன்று நிறுவனங்கள் முகக்கவசம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனைசெய்வது கண்டறியப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கண்ட பொருள்கள் அத்தியாவசிய பொருள்களின் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், விற்பனை விலையைவிடக் கூடுதலாக விற்கும் நிறுவனங்களின் அங்கீகாரம் நிரந்தரமாகச் சீல்வைக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:அதிக விலைக்கு முகக்கவசங்கள்: அபராதம் விதித்த அலுவலர்கள்

Last Updated : Mar 24, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.