விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழையால், தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. சாலை மீது அதிகளவில் நீர் செல்வதால், மக்கள் வெளியே வர முடியாமல் தவித்துவருகின்றனர்.
வன்னிபேர் கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி தீவுபோல காட்சி அளிக்கிறது. இதனையடுத்து, திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான காவல் துறையினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.