ETV Bharat / state

கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

author img

By

Published : May 29, 2020, 7:10 PM IST

விழுப்புரம் : திண்டிவனம் அருகே தொடர்ந்து கள்ளச்சராய கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நபர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) மரூர் ராஜா (வயது 36). பிரபல சாராய வியாபாரியான இவர், தொடர்ந்து கள்ளச்சாரயம் கடத்துதல், அதனை விற்பனை செய்தல் என குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது ஏற்கனவே திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கின் மத்தியில், கள்ளச்சாராய வியாபாரம் மீண்டும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தலைத்தூக்கியுள்ளதை அடுத்து, இவரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று இன்று காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையின் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : கள்ளுக்கடைகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் - நல்லசாமி கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.