கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்ஃபோன் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை ரூ.3,051 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, 5 லட்சம் சதுர மீட்டர் (174 ஏக்கர்) பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த ஆலையில் தினசரி 92,000 மொபைல்ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல்ஃபோன்களை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்த விரிவாக்க செயல் திட்டம் நடைபெறவுள்ளது.
இந்த தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செல்ஃபோன் உதிரி பாகங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த விரிவாக்க பணிகளை தொடர்ந்து இங்கு 'ஆப்பிள் ஐஃபோன்' உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பம் சமர்பித்துள்ளது.
இதையும் படிங்க: மோப்பநாய்க்கு கிடைத்த கவுரவம்! சீசருக்கு பிரியா விடை கொடுத்த அதிகாரிகள்
இதன்முலம் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 29ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்