ETV Bharat / state

"என்னை அடிச்சதுக்கு பதில் சொல்லு" போலீஸாருடன் மல்லுக்கட்டிய நபர்! வைரல் வீடியோ

விழுப்புரம்: விசாரிக்க சென்ற காவலருக்கும், இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

போலீஸாருடன் மல்லுகட்டிய நபர்
போலீஸாருடன் மல்லுகட்டிய நபர்
author img

By

Published : Jul 7, 2020, 4:19 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் ஆனத்தூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்(30). அவருக்கும் திருமுண்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவருக்கும் வீடு கட்டும் பணி ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதனால் சந்திரபோஸ் திருவெண்ணைய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தங்கவேல் மற்றும் தலைமை காவலரும் முத்துராமனிடம் விசாரிக்க நேரில் சென்றனர்.

அங்கு விசாரணை நடத்தியதில் முத்துராமனுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது.

போலீஸாருடன் மல்லுகட்டிய நபர்

அதில் காவலர் தாக்கியதில் முத்துராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முத்துராமன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: காலணியை தூக்கிய ஊராட்சி செயலாளர் காணொலி: எம்எல்ஏ வில்வநாதன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.