மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிமுக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அரசுத் துறை பணியாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 360 தூய்மைப் பணியாளர்களுக்கும், 120 அரசு பணியாளர்களுக்கும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காய்கறி, மளிகை பொருள்கள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர், வடக்கு ஒன்றிய கழக செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கல் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்த குணமடைந்தவர்!