கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள களமருதூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ரோபோடிக் ஆய்வக தொடக்க விழா பள்ளியின் தாளாளர் தொல்காப்பியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நாசா அறிவியல் அறிஞர் கலந்துகொண்டு ரோபோடிக் ஆய்வகத்தைப் பற்றி மாணவர்களுக்கிடையே செய்முறை பயிற்சி அளித்து ரோபோடிக் ஆய்வகத்தை தொடக்கிவைத்தார்.
அப்போது, அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் பாடங்களைப் படிக்கும்போது புரிந்துகொண்டு படிக்க வேண்டும். பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் உடனே வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது நூலகத்திற்குச் சென்று பல புத்தகங்களை படிக்கின்றபோதுதான் நம் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும் என்று கூறினார்.
சீனிவாசன் விஜயரங்கன் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கோட்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளிமைய ஆராய்ச்சியாளர்களால் பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.