விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கு முன்னாதாக கடந்த ஐந்தாம் தேதி சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அந்தக் கண்காட்சியில் தேர்வான மாணவர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டோர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மேலும், இந்நிகழ்ச்சியை கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்து மாணவர்கள் செய்த அறிவியல் கண்காட்சிப் பொருட்களைப் பார்வையிட்டார்.
இதையும் படிங்க : திருடச் சென்ற இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன் கைது