கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் சென்னை சாலையில் பழைய இரும்புக் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் விரைந்துவந்த அலுவலர்கள் ஒருமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும், 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தள்ளது.
இதையும் படிங்க: பாத்திரக்கடை தீவிபத்து - பொருட்கள் நாசம்