கள்ளக்குறிச்சி அருகே க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி வனிதா. இவர் ஊராட்சி குப்பை அள்ளும் மின்கல மூன்று சக்கர வாகன ஓட்டுநராக உள்ளார். இன்று வனிதா தனது எட்டு வயது மகன் பாலாஜியுடன் தனது வாகனத்தில் சேகரித்த குப்பையை கொட்டிவிட்டு க.அலம்பலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் வாகனம் நிலை தடுமாறி சாலையோரக் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வனிதா உயிருடன் மீட்கப்பட்டார்.
கிணற்றில் மூழ்கிய சிறுவன் பாலாஜி மாயமான நிலையில் சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பதாகை ஏந்திய புதுமணத் தம்பதி!