விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொந்தரவு
அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஆஜராகவில்லை.
பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மேலும் வரும் 10ஆம் தேதி சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும், அன்றைய தினம் சாட்சிகள் கட்டாயம் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நீலகிரிக்கு கிளம்பினார் முதலமைச்சர்