அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நகரில் பொதுமக்கள் நலன் கருதி வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள நான்கு நாள்களில் அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளன. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மருத்தகங்கள் தவிர வேறு எந்தவித அத்தியாவசிய கடைகளும், காய்கறி சந்தைகளும் செயல்படவில்லை. இந்த நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக நகாரட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காத்து காத்து காத்துக்கு நான் எங்கடா போவேன்…! - தவிக்கவைத்த கரோனா