ETV Bharat / state

வாக்கு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை! நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு - polling device

விழுப்புரம்: வாக்களிக்கும் இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என அக்கட்சியின் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரகலதா ராம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு
author img

By

Published : Apr 5, 2019, 12:43 PM IST

Updated : Apr 5, 2019, 1:01 PM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரகலதா ராம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை வசதி பிரச்னைகள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.

மாவட்டத்தில் அதிகளவில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் விழுப்புரம்-திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்.

இதன்மூலம் 37 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுவதினால் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். திரைத் துறையில் இருந்து வருபவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் நிலை தெரிந்துவிடும்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் மிகச்சிறிய அளவில் தெளிவற்று இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளேன்' என்றார்.

Intro:விழுப்புரம்: வாக்களிக்கும் இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என அக்கட்சியின் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரகலதா ராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Body:விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரகலதா ராம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

'விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை வசதி பிரச்னைகள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகளவில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் விழுப்புரம்-திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். இதன்மூலம் 37 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும்.

பெண்களுக்கு இழைக்கபடும் கொடுமைகள் தீர பெண்கள் அதிகளவில் அதிகாரத்துக்கு வரவேண்டும். நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். திரைத்துறையில் இருந்து வருபவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்த தேர்தலில் கமல்ஹாசனின் நிலை தெரிந்துவிடும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளவாக இல்லை. மேலும் மிகச்சிறிய வடிவில் உள்ளது. இதுத்தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளேன்' என்றார்.

Conclusion:இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் அருண்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Last Updated : Apr 5, 2019, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.