விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வழியாக திருக்கோவிலூருக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில்,இன்று (ஜூன் 5) காலை 6 மணியளவில் தேவனூர் கூட்டு சாலை சந்திப்பில் வந்த பொலிரோ பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 20க்கும் மேற்பட்ட புதினா மூட்டைகளுக்கு கீழ் 51 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டுநர் மனிபாலன், பாண்டியன், சதீஷ் ஆகிய மூன்று பேரையும் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், கடத்த முயன்ற குட்கா, பான்மசாலாவை நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தது தெரியவந்தது. அதன் விற்பனை மதிப்பு சுமார் ரூ. 12 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது