ETV Bharat / state

ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த கொடுமைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு தேவை - அன்புமணி

ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்

author img

By

Published : Feb 16, 2023, 8:43 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களை குரங்குகளை ஏவி கடிக்க வைத்துள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது, அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.

இந்த ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன? இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா என்பது கண்டறியப்பட வேண்டும்.

இல்லத்திலிருந்து எவ்வளவு பேர் கடத்தப்பட்டனர்? எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டனர்? என்பன உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மேலும் இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நரிக்குறவர் சமூக சாமி சிலைகள் பிரச்னை; காவல்நிலையம் முன் இருதரப்பினர் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.