ETV Bharat / state

செஞ்சி வாரச்சந்தையில் ஒரேநாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி! - Goats sale for Rs 5 crore in one day at Gingee Weekly Market

விழுப்புரம்: புகழ்பெற்ற செஞ்சி வாரச்சந்தையில் ஏறத்தாழ ரூ.5 கோடி மதிப்பிலான ஆடுகள் ஒரேநாளில் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Goats sale for Rs 5 crore in one day at Gingee Weekly Market
செஞ்சி வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி!
author img

By

Published : Jan 8, 2021, 10:11 PM IST

வட தமிழ்நாடு மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 1,000 முதல் 3,000 வரையிலான ஆடுகள் வரை விற்பனையாகிவருகின்றன.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள், மாடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடும். அந்தவகையில், எதிர்வரும் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன. 08) செஞ்சி ஆட்டுச் சந்தையில் அதிகாலை 2 மணி முதல் அதிக அளவு வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை வாங்க வருகைதந்ததால் வாரச்சந்தை களைகட்டியது.

செஞ்சி வாரச்சந்தையில் ஒரேநாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி!

அத்துடன், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கு ஆடுகளை கொள்வனவுச் செய்ய (பேரம் பேசுதல்) அரசு அலுவலர்களும், பயனாளிகளும் வாரச்சந்தைக்கு அதிகளவு வந்ததால் ஆடுகளின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர், வெள்ளை, பட்டினம், மேச்சேரி, கறுப்பு, குரும்பை எனப் பல இனங்களைச் சேர்ந்த சுமார் 5,000 ஆடுகள்வரை இன்று விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டன. ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.28,000 வரை ஆடுகள் விற்பனைசெய்யப்பட்டன.

கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவதியுற்றிருந்த வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் இன்றைய விற்பனையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து திருச்சியில் 21ஆம் தேதி கூடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.