ETV Bharat / state

நாமக்கல்லில் இரட்டைக் கொலை.. வட மாநில தொழிலாளர்கள் மூவர் கைது..! - NAMAKKAL NORTH INDIANS MURDER

நாமக்கல் அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஜார்கண்ட் மாநிலத்தவர்கள், கொலை நடந்த இடம்
கைதான ஜார்கண்ட் மாநிலத்தவர்கள், கொலை நடந்த இடம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 13 hours ago

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பாதரை என்ற பகுதியில் கடந்த 17-ம் தேதி அதிகாலை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வட மாநில தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் முன்னா, துபலேஷ் ஆகிய இருவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தனர். கொலை குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்கள் யார் என மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில், வெப்படை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது கொலை செய்யப்பட்டு இருந்த இருவரிடம், மூன்று இளைஞர்கள் தகராறு செய்துவிட்டு சென்றது தெரிய வந்தது.

அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாத சூழ்நிலையில், சிசிடிவி கேமராவில் இருந்த புகைப்படத்தின் மூலம் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பொழுது பாதரை பகுதியில் இயங்கும் மற்றொரு தனியார் நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து புதிதாக மூன்று இளைஞர்கள் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அந்த மூன்று இளைஞர்களை மட்டும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, மதுபான கடையில் மது அருந்தும் பொழுது ஒரிசா மாநில இளைஞர்கள் தங்களையும், தங்கள் பெற்றோரையும் தகாத வார்த்தைகளில் திட்டியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த ராஜன் லகூரி, மான்சிங் சுக்ராய், தசரத்படிங்க் என்ற மூன்று இளைஞர்களையும் கைது செய்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.