விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடு போவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையான காந்தி பஜார், திருவண்ணாமலை திண்டிவனம் சாலை, விழுப்புரம் சாலை ஆகிய பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவருகின்றனர்.
காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலும் செயல்படாததால், திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்கமுடியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர். செஞ்சியின் முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி வாகனத் திருட்டை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், தொடர் வாகனத்திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு- குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு!