விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செஞ்சி அனைத்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதனடிப்படையில், ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைராஜா (28), மண்ணாங்கட்டி ( எ ) வெங்கடேசன் (77), மோகன் (32) ஆகியோர் ஜன.9ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு (22), சத்தியராஜ் (28), குப்பு (50) ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 மற்றும் 100 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
இதற்கிடையில், பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஏழுமலை என்பவர் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
பள்ளி மாணவி வன்புணர்வு; 8 பேர் கைது - vilupuram gang rape case
விழுப்புரம் அருகே மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.