ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது; நடந்தது என்ன? - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் கைது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்காக கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்திருப்பதாகக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம்

author img

By

Published : Apr 7, 2022, 9:39 PM IST

விழுப்புரம்: பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக அரசு கொண்டுவந்த தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை ரத்து செய்தது, அண்மையில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா, தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய தாய்மார்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயலாற்றியவர்.

பெற்ற தாயை தான் அம்மா என்று அழைப்பர் என ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் விளக்கம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், உலகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அம்மா என்றால், எங்கள் அம்மா ஜெயலலிதா தான். இதுதான் புதுவிளக்கம். அத்தகைய அம்மா கொண்டு வந்த பெண்கள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை இந்த திமுக அரசு ரத்து செய்துள்ளது.

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

10 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்த ஒரு நல்வாய்ப்பை ஸ்டாலின் அரசு, பெண்கள், தாய்மார்கள் தான் அதிமுகவின் வாக்கு வங்கி என்னும் குறுகிய மனப்பான்மையோடு அத்தனை திட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. முன்பெல்லாம் பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் தான் அவர்களுக்கு ஆபத்து. ஆனால், இப்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட்டுப்பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுதான் திமுக அரசு பெண்களுக்குக் கொடுத்த பரிசு.

கல்வி பயிலும் பெண்களுக்கு ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்குவேன் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அது அரசு கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமா அல்லது தனியார் கல்லூரி மாணவர்களுக்குமா என்கின்ற எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி எனக்கூறி ஏமாற்றியது போலத்தான் ஏமாற்றுவார்கள்” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம்

தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் புதுவை - விழுப்புரம் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்பட்டதால் சி.வி. சண்முகமே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும்வேளையில் இறங்கினார். இந்நிலையில் அரசிடம் உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது; போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது; காவல் துறையின் அறிவிப்பையும் மீறி தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து ஏன்? - அமைச்சர் பெரியகருப்பனின் பலே விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.