ETV Bharat / state

தென்பெண்ணையாறு விவகாரம் - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி யோசனை

author img

By

Published : Nov 21, 2019, 2:40 PM IST

Updated : Nov 21, 2019, 5:29 PM IST

விழுப்புரம்: தென்பெண்ணையாறு விவகாரத்தில் சுமூக தீர்வு காண 3 அல்லது 5 நீதிபதிகள் கொண்ட "அரசமைப்பு ஆயத்தை" அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி யோசனை தெரிவித்துள்ளார்.

பொன்முடி

தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கர்நாடக அரசை தடுத்து நிறுத்த தவறிய அதிமுக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. பொன்முடி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேயா ஆற்றின் குறுக்கே ரூ.87 கோடி செலவில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க அணை கட்டப்பட உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தென் பெண்ணையாற்றில் 8 அடி விட்டம் கொண்ட குழாய்கள் அமைக்கப்பட்டு 100 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 1,000 மில்லியன் கனஅடி தண்ணீர் தடுத்து நிறுத்தப்படுகிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் குடிநீர் இல்லாத சூழ்நிலையை கர்நாடகா அரசு உருவாக்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. இதனை தட்டிக்கேட்க தமிழ்நாடு அரசுக்கு திராணியில்லை. மேலும் இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தீர்வாக மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட "அரசமைப்பு ஆயத்தை" அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்துக! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Intro:விழுப்புரம்: தென்பெண்ணையாறு விவகாரத்தில் சுமூக தீர்வுகாண 3 அல்லது 5 நீதிபதிகள் கொண்ட "அரசமைப்பு ஆயத்தை" அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி யோசனை தெரிவித்துள்ளார்.Body:தென்பெண்ணை ஆற்றில் அணைகட்டும் கர்நாடக அரசை தடுத்து நிறுத்த தவறிய அதிமுக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. பொன்முடி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்.,

"தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேயா ஆற்றின் குறுக்கே ரூ.87 கோடி செலவில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க அணை கட்டப்பட உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், தென் பெண்ணையாற்றில் 8 அடி விட்டம் கொண்ட குழாய்கள் அமைக்கப்பட்டு 100 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய 1000 மில்லியன் கனஅடி தண்ணீர் தடுத்து நிறுத்தப்படுகிறது.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் குடிநீர் இல்லாத சூழ்நிலையை கர்நாடகா அரசு உருவாக்கியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு கொடுக்கிறது. இதனை தட்டிக்கேட்ட தமிழக அரசுக்கு திராணியில்லை. மேலும் இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

1892 உடன்படிக்கையின் படி தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணைகட்டக் கூடாது என்பது ஒப்பந்தம்.

கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தீர்வாக மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட "அரசமைப்பு ஆயத்தை" அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அங்கையற்கண்ணி, திமுக எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, உதயசூரியன், வசந்தம் காரத்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம் மற்றும் நூற்றுக்கணக்காண திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

(இந்த செய்திகான விடியோ மெயிலில் உள்ளது)
Last Updated : Nov 21, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.