கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள நாகலூர் ஏரிக்கரை அருகே ஒருவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, ஏரியில் தண்ணீர் அருந்த சென்ற ஆட்டினை தண்ணீரிலிருந்த மலைப் பாம்பு தீடீரென கவ்வி விழுங்க முயன்றது. இதை பார்த்த ஆடு மேய்ப்பவர் அதிர்ச்சி அடைந்து ஆட்டினை காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தியாகதுருகம் தீயணைப்புத் துறையினர், பாம்பிடமிருந்து ஆட்டை காப்பாற்ற முயன்றபோது பாம்பு அவர்களிடமிருந்து தப்பித்து தண்ணீருக்குள் சென்றது ஆனால், அங்கு போடப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்கிக்கொண்டது.
பின்னர், தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடித்து அதன் உடலில் ஆங்காங்கே சிக்கியிருந்த மீன் வலை நரம்புகளை அகற்றி அந்த பாம்பினை பாதுகாப்பாக கொண்டு சென்று பொரசக்குறிச்சி காப்புக்காட்டு பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: மூதாட்டி வெட்டிக் கொலை - கொலையாளிக்கு ஆயுள் தண்டனை