விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், பெண் எஸ்பி பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று (டிசம்பர் 10) பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியின் கணவர் நேரில் சாட்சியமளித்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 15, 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிராக்டர் டிரெய்லர்களை இணையத்தில் பதிவுசெய்ய தேவையில்லை - உயர் நீதிமன்றம்