ETV Bharat / state

பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு - பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம், முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்‍கு விசாரணையை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை

author img

By

Published : Mar 29, 2022, 6:48 PM IST

விழுப்புரம்: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில், கடந்த ஜூலை 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்‍கில் அவர்கள் இருவருக்‍கும் பிணை வழங்கப்பட்டு, வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய எஸ்.பி ஆகியோர் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து பெண் எஸ்.பியிடம் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் 9 ஆவது முறையாக குறுக்கு விசாரணை நடத்தினர்.

இந்த குறுக்கு விசாரணையை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்தார். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடத்துவதற்காக, ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை அறிமுகம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.