விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அவனம்பட்டு கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதில், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரியாமலேயே மாற்று நபர்களின் பேரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு உடந்தையாக அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராம்குமார் என்பவர் செயல்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தருமாறு அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நில அபகரிப்பு: விவசாயிகள் புகார்! - Villupuram SP office
விழுப்புரம்: அவனம்பட்டு கிராம மக்கள் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் தங்களின் ஒப்புதல் இல்லாமலே வேறு ஒரு நபரின் பேரில் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.