ETV Bharat / state

வேகமாக நிரம்பும் வீடுர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி! - Veedar Dam is filled

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Etv Bharatவிழுப்புரம் வீடூர் அணை நிரம்பியதால் சுற்றுவட்டார மக்கள்  மகிழ்ச்சி

author img

By

Published : Dec 11, 2022, 12:39 PM IST

Updated : Dec 12, 2022, 6:14 AM IST

விழுப்புரம்: மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வீடூர் அணை மயிலம்,வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வீடூர் அணை திறந்து வைக்கப்பட்டது. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட 13-வது அணைக்கட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரினால் தமிழ்நாடு, புதுச்சேரிப் பகுதியில் உள்ள 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. புதுச்சேரி, வானுார், மயிலம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பாசன நிலங்களின் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது.வீடூர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32 அடியாகும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர் 28 அடிக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மயிலம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தனி, கணபதிபட்டு, ரெட்டிகுப்பம், எம்.குச்சிபாளையம் கயத்துார் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆற்றுப்படுகையிலிருந்து தண்ணீர் எடுத்து செல்லுகி்ன்றனர். வழக்கத்தை விட வீடூர் அணையில் நீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

இதையும் படிங்க:வீடுகளை சூழ்ந்த அரியூர் ஏரி உபரிநீர்.. வேலூர் மக்கள் அவதி!

Last Updated : Dec 12, 2022, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.