தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பெயரில் போலியான ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் ராஜாராம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று புகார் அளித்தார்.
இந்தப் புகாரில், அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் ஏதும் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அமைச்சர் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, அதில் தவறான தகவல்கள் வெளியிட்டுவருவதாகவும், அந்தக் கணக்கினை நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து, போலி ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: போலி செய்திகள்: கோலி விழிப்புணர்வு