ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னாள் எம்.பி. நிவாரண உதவி - Ex MP provides corona relief package to Sweepers in Villupuram

விழுப்புரம் : முன்னாள் எம்.பி. லட்சுமணன், அதிமுக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் எம்பி

author img

By

Published : May 1, 2020, 12:02 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இரவு, பகல் பாராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் பங்கு இதில் அளப்பரியது.

இந்நிலையில், விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பானாம்பட்டு சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான டாக்டர். லட்சுமணன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகள், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருள்களை வழங்கினார்.

தங்களது நிலையைக் கருத்தில்கொண்டு உதவிக்கரம் நீட்டிய லட்சுமணனுக்கு தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவித்து பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: மாவட்ட எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.