விழுப்புரம்: இன்று (ஆக.24) செய்தியாளர்களிடத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'நாளை பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என உயர்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை நீட் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தால் நாளை நடைபெற இருந்த பொறியியல் கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்கள் கழித்து பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறும். இது போன்ற பிரச்சனைகளுக்காக தான் புதிய கொள்கை திட்டத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாமல் மாநில கல்விக் கொள்கை மட்டுமே வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் முழுமையான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
மத்திய மாவட்ட கழக செயலாளர் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் யோகா, ஆயுர்வேதா, சித்தா பாடத்திட்டங்களும் அறிமுகம்