ETV Bharat / state

"இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால்  அமலான நன்னடத்தை விதிகள்" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி
author img

By

Published : Sep 21, 2019, 5:26 PM IST

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 3ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மாவட்டத்தில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கைகளும் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்காக 139 இடங்களில் 275 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 6 வாக்குச்சாவடிகளில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தாயார் நிலையில் உள்ளது. தேர்தல் பணிக்காக 1,333 பேர் பயன்டுத்தப்படவுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுலவராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Intro:விழுப்புரம்: விக்ரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.Body:இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்.,

"விக்ரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 3-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மாவட்டத்தில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

விக்ரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும் 25 திருநங்கைகளும் உள்ளனர்.

விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 139 இடங்களில் 275 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 6 வாக்குச்சாவடிகளில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 9 பறக்கும் படை மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் 1,333 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய விக்ரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Conclusion:வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் விரைவில் தேர்வு செய்யப்படும்" என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.