ETV Bharat / state

திருமாவளவன் டெபாசிட் இழப்பார் -  ராமதாஸ்

விழுப்புரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ்
author img

By

Published : Apr 2, 2019, 9:10 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணணை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பரப்புரையின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது

விழுப்புரம் தியாகிகள் வாழ்ந்த மாவட்டம். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை இழந்த புண்ணிய பூமி. பாமக போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக நானும், லட்சக்கணக்கான பாமக தொண்டர்களும் சிறை சென்றுள்ளோம். திமுக அராஜகம் செய்யும் கட்சி. அவர்களுக்கு நாகரீகம் என்பதே கிடையாது. மாலை போட்டு கழுத்தை அறுப்பவர்கள்.

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் முகமுடி அணிந்து போட்டியிடுகிறார். திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைக்கும் போது, இவருக்கு தோண்டி சின்னம் கூட கிடைக்கவில்லையா?. சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார். தமிழக மக்களும், இளைஞர்களும் விழிப்புடன் உள்ளனர்.

திமுகவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:விழுப்புரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Body:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி துவங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து விழுப்புரம் பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், வடிவேல் ராவணணை ஆதரித்து விழுப்புரத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.,

'விழுப்புரம் தியாகிகள் வாழ்ந்த மாவட்டம். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை இழந்த புண்ணிய பூமி.

பாமக போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக நானும், லட்சக்கணக்கான பாமக தொண்டர்களும் சிறை சென்றுள்ளோம்.

திமுகவினரை பார்த்தாலே வணிகர்கள் பயப்படுகிறார்கள். திமுக அராஜகம் செய்யும் கட்சி. அவர்களுக்கு நாகரீகம் என்பதே கிடையாது. திமுகவினர் மாலை போட்டு கழுத்தை அறுப்பவர்கள்.

விழுப்புரம் விசிக வேட்பாளர் முகமுடி அணிந்து போட்டியிடுகிறார். சின்னத்தை இரவல் வாங்கி களம் கண்டுள்ளார். திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைக்கும் போது, இவருக்கு தோண்டி சின்னம் கூட கிடைக்கவில்லையா?

சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார். தமிழக மக்களும், இளைஞர்களும் விழிப்புடன் உள்ளனர்.

அதிமுகவுடன், பாமக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு எரிச்சல். அதிமுகவினர் வெற்றிக்காக உழைக்க கூடியவர்கள். இந்த தேர்தலில் திமுகவினருக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுகவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தேர்தல் முடிந்தவுடன் பரிசீலிக்கப்படும்' என்றார்

Conclusion:இந்நிகழ்வில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.