ETV Bharat / state

முரசொலி மாறன் பிறந்தநாள்: திமுகவினர் மரியாதை - மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன்

விழுப்புரம்: மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

DMK paid floral tributes to the late Union Minister Murasoli Maran on his birthday.

author img

By

Published : Aug 17, 2020, 7:47 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனசாட்சி என போற்றப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது முழு உருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி மலர்தூவி மரியாதை செய்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.