விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டை தெரிவிப்பது முறை. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகூட தெரியாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருகிறார்.
திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெறவில்லை.
அதிமுக, பாஜக கட்சியினர் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை நேற்று (டிச.22) அமைச்சர்கள் ரகசியமாக சந்திக்க சென்றனர். இதுபற்றி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கலந்தாலோசிக்கவில்லை.
இதிலிருந்து அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பது தெரிகிறது. சி.வி.சண்முகம்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் கோஷ்டிப் பூசல் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி