ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 லட்சம் கையெழுத்துகள் பெறத் திட்டம் - க.பொன்முடி - dmk Signature movement

விழுப்புரம்: மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் இரண்டு லட்சம் கையெழுத்துகளைப் பெறவுள்ளோம் என்று திமுக மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக தோழமை கட்சிக் கூட்டம்  விழுப்புரம்  திருக்கோயிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி  கையெழுத்து இயக்கம்  dmk and his alliance party plan to get 2 lakh sign in viluppuram against caa Signature movement  dmk Signature movement
Ponmudy
author img

By

Published : Jan 30, 2020, 8:15 AM IST

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நேற்று விழுப்புரத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.பொன்முடி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது

இதில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெற முடிவு செய்துள்ளோம். எங்களது கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தரவுள்ளார்.

இந்த கையெழுத்து இயக்கமானது மத்திய அரசு, அவர்களுக்கு காவடி தூக்குகிற அதிமுக அரசு மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாமகவை எதிர்த்து நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதவி தொகை பெற 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - பெண் ஊழியர் கைது

Intro:விழுப்புரம்: மத்திய அரசுக்கு காவடி தூக்கும் அதிமுக மற்றும் பாமகவுக்கு பாடம் புகட்டவே கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி கூறியுள்ளார்.

Body:தேசிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பிப்ரவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து விழுப்புரத்தில் இன்று மத்திய மாவட்ட கழக செயலாளர் க.பொன்முடி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொன்முடி.,

"கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிப்ரவரி 2 முதல் 8 வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இவற்றை விலக்கி முணுமுணுப்பு பிரசாரமாக திண்ணைப் பிரசாரம் வீடு வீடாகச் சென்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தோழமை கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக சார்பில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து பெற முடிவு செய்துள்ளோம். எங்களது கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தர உள்ளார்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவர்களுக்கு காவடி தூக்குகிற அதிமுக அரசை கண்டித்தும், ஒரே ஒரு எம்பியை அனுப்பி இந்தியக் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ள பாமகவுக்கு பாடம் புகட்டுகின்ற வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.