தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல்18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தேமுதிக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான எல்.கே சுதிஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
'கள்ளக்குறிச்சி தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தது முதலமைச்சர் பழனிசாமியும், சட்டத்துறை அமைச்சர் சண்முகமும் தான்.
ஆனால் பொன்முடி அமைச்சராக இருந்தபோது கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'. இவ்வாறு அவர் கூறினார்.