ETV Bharat / state

விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.24 உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

author img

By

Published : Feb 10, 2023, 1:42 PM IST

விழுப்புரம்: இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், "புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்றும், மாணவ - மாணவிகளுக்கு 24-ஆம் தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள 24-ஆம் தேதிக்குப் பதிலாக, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4-ஆம் தேதி (4.3.2023 - சனிக்கிழமை) பணி நாளாகும்." என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold rate today: மக்களே ரெடியா.. தங்கம் விலை ரூ.440 குறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.