ETV Bharat / state

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி புகார்.. இயக்குநர் கைது! - பாலியல் பலாத்காரம்

Raping case: சென்னை மதுரவாயலில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Raping case
பாலியல் பலாத்காரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 3:51 PM IST

சென்னை: திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (25). திரைப்பட இயக்குநராக படம் ஒன்றை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் குமாருக்கு அறிமுகமான துணை நடிகை ஒருவரின் தோழியான 19 வயது கல்லூரி மாணவி பாஸ்போர்ட் எடுப்பதற்காக சென்னை வந்ததாக தெரிகிறது. அந்த மாணவி மதுரவாயலில் உள்ள அஜித்குமார் வீட்டில் தங்கி இருந்ததாகவும், இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அஜித் குமார் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி போதையில் இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இயக்குநர் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:அதிதீவிர புயலாக மாறிய 'ஹமூன்' - எந்தெந்த மாநிலத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.