ETV Bharat / state

இடுகாட்டில் புதைக்க இடம் மறுப்பு.. சாலையோரம் எரிக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலம்.. - deadbody

விழுப்புரம் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனி சுடுகாடு இல்லாததால், இறந்த பெண்ணின் உடலை 3 நாள்கள் அடக்கம் செய்யாமல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின் சாலையோரம் இருந்த ஓடைக்கரையில் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே தலித் பெண் உயிரிழப்பு-சுடுகாடு இல்லாத நிலையில் இறந்த உடலுடன் 3 நாட்கள் போராட்டம் நடத்திய அவலம்

author img

By

Published : May 21, 2022, 4:04 PM IST

Updated : May 21, 2022, 5:11 PM IST

விழுப்புரம், மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட தலித் சமுதாய குடும்பங்களும், 500 க்கும் மேற்பட்ட மாற்று சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். தலித் மக்களுக்கு நிலையான இடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரி,ஓடை,குளத்திலும் எரிப்பதும், புதைப்பதுமாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக விக்கிரவாண்டி வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியருக்கு பல முறை புகார் அளித்தும் நிலையான இடுகாடு அமைத்து தராமல் தற்காலிகமான இடங்களை மட்டுமே அமைத்து கொடுத்ததாக தலித் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 18.5 .2022 அன்று இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்யநாராயணன் என்பவரின் மனைவி அமுதா இறந்த நிலையில், உடலை அடக்கம் செய்யவதற்கு 19.5.2022 அன்று விழுப்புரம் கோட்டாச்சியர் தலைமையில் ஓர் இடத்தை தேர்வு செய்து உடலை அடக்கம் செய்வதற்கான பணியை மேற்கொண்ட போது மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது

இதனையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு நிலையான இடுகாடு அமைத்து தர வலியுறுத்தி இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தினர். இரண்டு நாட்களாக தொடர்ந்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், துணை கண்காணிப்பாளர் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே தலித் பெண் உயிரிழப்பு-சுடுகாடு இல்லாத நிலையில் இறந்த உடலுடன் 3 நாட்கள் போராட்டம் நடத்திய அவலம்

அப்போது வரும் 26 ஆம் தேதி சமாதானக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனிடையே அப்பெண்ணின் உடல் அதே ஊரில் உள்ள ஒரு ஓடைக்கரையில் எரிப்பது என முடிவெடுக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் எரியூட்டப்பட்டது. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Last Updated : May 21, 2022, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.